Wednesday, January 21, 2009

எனக்கு பிடித்த கவிதை

நான் சமீபத்தில் படித்து ரசித்த கவிதை -
இதை எழுதியது அண்ணாகண்ணன்

சாலையைக் கடக்கிறார்கள்

என் அம்மா ரொம்ப அழகு
ஒளிபடைத்த கண் அவளுக்கு.
யோகாசனம் செய்வதுபோல
சோம்பல் முறிக்கிறபோது
சடசடவென நெட்டி முறியும்.

நாடோடியாக இருந்தாலும்
நாகரிகம் தெரிந்தவள்.
அமைதியானவள் தான்.
ஆனால், வீரத்திலும் தன்மானத்திலும்
நிகரற்றவள்.
வீண்வம்பு செய்வோரிடம்
பெரிய போராளியாகவே மாறிவிடுவாள்.

Sunday, January 18, 2009

பிரதிபலிப்பு

ஒரு நல்ல மனைவியின்
சுயசரிதம் - அவளது
கணவனின் பிரகாசமான
முகத்தில் இருக்கிறது !

மௌனம்

மௌனம்
ஒரு
அழகிய மொழி
வேண்டிய இடத்தில்
பேசுங்கள் - அதன்
அர்த்தம் தெரியும்

காதல்

காதலில் மட்டும் தான்,

தொடங்குவது கஷ்டம் , தொடர்வது கஷ்டம்
முடிப்பது கஷ்டம் , முடிந்தாலும் கஷ்டம்

Wednesday, January 7, 2009

சுவாமி விவேகானந்தர்

விவேகானந்தர்தான் சொன்னார்
பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், "மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும்