மனதை மட்டுமல்ல மக்களையும் திருத்த நினைத்தவர்
பிறந்த தேதி : ஜனவரி12, 1863
மறைந்த தேதி : ஜூலை 4, 1902
1. புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்த தத்துவத்தையும் ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
2. "உடலை பலமாகவைத்துக் கொண்டால் தான் உள்ளம் பலமாகும் " என்பது அவரது போதனை. சிறு வயதிலேயே சிலம்பம், மல்யுத்தம், நீச்சல், படகு ஓட்டுதல் போன்ற பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார்.
3. ஐந்து ஆண்டு காலம் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்தவர் கையில் காசு இல்லாமல். மைசூர் மகாராஜா மொத்த செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற போதும் " திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்" என்று மறுத்து விட்டார்.
4. கலிபோர்னியாவில் இவர் நடந்து போய் கொண்டிருந்த போது துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்த இவர் வாங்கி, ஆறு முட்டைகளையும் சரியாக சுட்டார். " துப்பாக்கியை இன்று தான் முதல் முறையாக பிடிக்கிறேன். இதற்க்கு பயிற்சி தேவையில்லை. மன ஒருமைப்பாடு தான் வேண்டும்" என்று சொல்லி விட்டு சென்றார்.
5. "முதலில் உங்களிடமே நம்பிக்கை கொள்ளுங்கள். அதன் பின் ஆடவனை நம்புங்கள் . உணர்வதற்கு இதயமும் , எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும் . இதயத்திற்கும் அறிவிற்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தை பின்பற்றி நடங்கள்"!