Thursday, March 12, 2009

செல்பேசியில் இலக்கியம்

இலக்கியத்தில் புதிய தொழில் நுட்பத்தை கொண்டு வருவதில் தமிழுக்கு என்றுமே முதலிடம் உள்ளது. அந்த வகையில் செல்பேசியை மூன்றாம் தலைமுறைக்கு தமிழ் அழைத்துச் சென்றுள்ளது.


ஒரு செல்பேசியில் ஆயிரம் புத்தகங்களை படிக்கும் வசதியை 'மொபைல் வேதா ' என்ற நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த 1 1/2 ஆண்டு காலமாக வேலூரில் VIT - பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வருகிறது.

'SEED' என்று பெயரிடப்பட்டுள்ள செல்பேசி நூலகத்தை கடந்த சனவரி 27 - ஆம் தேதி VIT - பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. ஜி. விஸ்வநாதன் அவர்கள் வெளியிட்டார்கள்.இதை பற்றிய தகவல்கள் http://www.fublish.com/seed என்ற இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.

இது ஒரு மெமெரி கார்ட் (Memory card) அல்லது குறுந்தகடு (C.D) வடிவில் கிடைக்கிறது. இதை நாம் எளிதில் நம்முடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் 600 தமிழ் நூல்களும் , 400 ஆங்கில நூல்களும், 10 ஒலி வடிவ நூல்களும், 50 பிரபலமானவர்களின் தவல்களும் உள்ளன.

சங்க இலக்கியத்தில் துவங்கி, சமகால இலக்கியம் வரையிலும் , பக்தி நூல்கள் , பக்தி பாடல்கள் , பாரதியார் பாடல்கள், நாவல்கள் , சிறுகதைகள் ,கவிதைகள், குழந்தைகளுக்கான நூல்கள் மற்றும் பயனுள்ள பொதுத் தகவல்கள் உள்ளன. சுருக்கமாக ,ஒரு நூலகத்தையே நம் செல்பேசியில் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்லும் ஓர் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

இதைப்பற்றி சன் டி.வி , குமுதம், தி ஹிந்து , டெக்கான் குரோனிக்கல் , இந்தியன் எக்ஸ்பிரஸ் , தினமலர், மாலை மலர் போன்ற பல்வேறு ஊடகங்களில் கடந்த ஒரு மாதகாலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன .

விரைவில் எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் நாவல்கள் செல்போனில் படிக்கும் விதமாக வெளிவர உள்ளன .

மேலும் விருப்பப்படும் பதிப்பகத்தாலர்களையும் மற்றும் எழுத்தாளர்கள் இந்த புதிய தொழில் நுட்பத்தோடு கைகோர்க்க அழைக்கிறோம்.

No comments: