காஷ்மீரில் தினமும் வன்முறை, கலவரம், அரசு அலுவலகங்கள் தீ வைப்பு.....இதில் பொது மக்களும் கலந்து கொள்கிறார்கள். அங்கு என்ன தான் நடக்கிறது, உண்மை நிலை என்ன? .
ஊடகங்களும், பத்திரிகைகளும் உண்மைச் செய்தியை கொடுக்கின்றனவா? அல்லது மறைக்கின்றதா?
நேற்றைய பத்திரிகைகளில் (15-09-2010) இடம் பெற்ற ஒரு புகைப்படத்தில் ஒரு சின்னஞ் சிறு சிறுவன் அரசுக்கு எதிராக குரழுப்பிக் கொண்டிருக்கும் படம் இடம் பெற்றிருக்கிறது. "பிரிவனை வாதிகள் தூண்டிவிடுகிறார்கள் " என்று அரசு தரப்பு கூறுகிறது.
சமீப காலமாக கல்லெறி போராட்டம் பொது மக்களே நடத்துகிறார்கள். யோசித்துப் பாருங்கள், அரசுக்கு எதிராக போராட்டம். ஆயுதம் ஏந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது அதற்க்கு எதிராக. இவர்களிடம் வெறும் கல் மட்டுமே, நிச்சயம் முடியாது வெறும் கல் மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு இராணுவத்தை எதிர்ப்பது என்பது. இருந்தாலும் அம்மக்கள் தங்களுடைய எதிர்ப்பை இதன் மூலம் தெரிவிக்கிறார்கள்.
நிச்சயம் அரசு உண்மையாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. அங்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் ஏன் எழுப்புகிறார்கள்? இதுவரை நாம் என்ன தவறு செய்திருக்கிறோம்? ஏன் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ள வில்லை? நாம் சரியாக அவர்களுக்கு புரிய வைக்கவில்லையா? அரசு அது தொடர்பான நடவடிக்கை சரியாக எடுக்கவில்லையா?
இவ்வாறு பல கேள்விகள் எழுந்தாலும்... இப்போது நாம் செய்ய வேண்டியது, இந்தியாவின் நிலைபாட்டை சரியாக செயல்படுத்துவது ஒன்றே...
இனி ஒருபடி நிலம் யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது.
காஷ்மீர் மக்களும் நம் மக்களே
அவர்களுக்கு ஒரு அமைதியான வாழ்வு நிலவட்டும்
இதற்கு என்ன செய்ய வேண்டுமோ அனைத்து தலைவர்களும் ஒன்று பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது.
இத்தனை நாளும் தீவிரவாதிகள் போராட்டம் நடத்தினார்கள். இப்பொழுது அத்தீவிரவாதிகள் பொது மக்களையும் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். எப்பொழுது பொது மக்களே போராட்டத்தில் குதித்து விட்டார்களோ , இனியும் நம் அரசு எதுவும் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.
No comments:
Post a Comment